PATTI MANDRAM

பட்டிமன்ற தலைப்பு : “சின்ன சின்ன பொய்கள் வாழ்வில் – சுகமே!! சுமையே!!”

பட்டிமன்ற நடுவர்: திரு. ராஜா

சுகமே என்கிற தலைப்பில்:

1. திரு.பிரபு சின்னத்தம்பி – நியூ ஜெர்சி
2. திரு.அகத்தியன் பெனடிக்ட் – வெர்ஜினியா
3. திரு.மோகன் இராமன் – நியூ ஜெர்சி

சுமையே என்கிற தலைப்பில்:

1. திருமதி: நெல்லிக்கனி அழகப்பன் – பென்சில்வேனியா
2. திருமதி: ஜெயா மாறன் – ஜார்ஜியா
3. திருமதி: பாரதி பாஸ்கர் – சென்னை

Pirabu Chinnathambi
வாசிப்பும் ரசனையும் சரியான ஆசான்களும் வாய்த்ததால் தமிழை சிறிய வயதிலேயே காதலிக்கத் தொடங்கியவன் நான். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவியரங்கம், பட்டி மன்றங்கள் என இருந்த நான் இன்று தமிழ் பள்ளி ஆசிரியராக பகுதி நேரத் தொண்டாற்றி வருகிறேன். நன்றி.
Agathiyan John Benedict
நான் சற்று சுமாராகப் பேசுவேன். வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் பணியாளனாகத் தொடர்ந்து இரண்டுமுறை பொறுப்பு. ‘அமெரிக்கன் பாப்பையா’ என்று வட அமெரிக்கத் தமிழர்களால் அழைக்கப்படுவதுண்டு. பன்னாட்டுப் புறநானூறு மாநாடு மற்றும் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடுகளை முன்னின்று நடத்தியவன். தமிழ் மேடையிலேயே
உயிர் துறக்கும் வரம் வேண்டியே வாழ்க்கை நடத்துவபன்!
Mohan Raman
மதுரையில் பிறந்து தியாகராஜர் கல்லுரியில் படித்து சென்னையில் வசித்து, இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். மனதுக்கு பிடித்ததால் மேடை நாடகங்கள், குறும் படங்களில் நடிப்பதும், பட்டிமன்றங்களில் பங்கேற்பது மற்றும் தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தால் தமிழ் பள்ளியில் ஆசிரியராக பகுதி நேரத் தொண்டாற்றி வருகிறேன். நன்றி.

Nellikkani Alagappan
பட்டிமன்ற பேச்சாளர்; தமிழ் மீது மிகுந்த பற்று உண்டு; டெலவர் பெருநிலத் தமிழ் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளேன்; மென்பொருள் பொறியாளர்.
Jaya Maran
பிறந்தது ஜெயாவாக மதுரையில்; மணந்தது மாறனை, வசிப்பது அட்லாண்டாவில்; வீட்டில் தாய்மைப் பொறுப்பு, ஜார்ஜியா டெக் பல்கலைக்கழகத்தில் நிதி ஆய்வுப் பொறுப்பு; பிடித்தது பட்டிமன்றப் பேச்சு, எழுதுவது கதையும் கவிதையும், முயல்வது இன்னும் வாசிக்க.